15

( 2 ) வேழப்பத்து


15. மணலாடு 1மலிர்நிறை விரும்பிய 2வொண்டழைப்
   புனலாடு மகளிர்க்குப் புணர்துணை யுதவும்
   வேழ மூதூ ரூரன்
   ஊர னாயினு மூரனல் லன்னே.

 எ-து சேணிடைப் பிரிந்து வந்து உடன் உறைகின்ற தலைமகற்
குப்புறத்தொழுக்கம் உளதாகின்றதென்று குறிப்பினால் உணர்ந்து
தலைமகள் வேறுபட்டாளாகத் தோழி அதனையறியாது, ‘அவன்
உடனுறையவும் வேறுபடுகின்றது என்னை?? என்றாட்கு அவள் சொல்லியது.

(ப-ரை.) புனலாடு மகளிர்க்குப் புணர்ந்த 2துணையை உதவு
கின்ற வேழத்தையுடைய ஊரனாதலாற் புனலாடும் பரத்தையர்க்கு
வேழஞ்செய்வனவெல்லாம் செய்வானென்பதாம்.

குறிப்பு. மலிர்நிறை-நீர்வெள்ளம். மலிரும் பிசிர் என்பதற்கு
ஊற்று நீர் எனப்பொருள் கொள்வர் (பரி. 6:83, உரை). மணலாடு
மலிர் நிறை; பரி.10:4 மலிர் நிறை: ஐங். 42 : 3, 72 : 4; குறுந்.
99 : 4; பதிற். 50 : 5; அகநா. 166 : 15, தழை-மலர்களாலும் தளிர்
களாலும் செய்யப்படும் ஒருவகை உடை; மகளிர் அணிவது ; ஐங்.
72:1 ; நற். 96, 123, 170. துணையென்றது துணையாக உதவும்
பொருளை. வேழம் புணையாக உதவுதல்: ?வேழ வெண்புனை
தழீஇ,? ?கொழுங்கோல் வேழத்துப் புணை துணையாகப், புனலாடு
கேண்மை? (அகநா. 6. 186). அல்லன் என்னும் மறை உடனுறை
வானாயினும் தலைவன் சிறிதும் அன்பிலனென்னும் பொருளைத் தந்து
நின்றது ?எமக்கு, நீயுங் குருசிலை யல்லை? (ஐங். 480 : 2)

 (பி-ம்.) 1‘மலர்நிறை? 2‘வெண்டழை? 3‘துணைமை?   ( 5 )