எ-து தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி, ‘இவ்வாறு ஒழுகுத
லும் ஆடவர்க்கு இயல்பன்றே; நீ இதற்கு நெஞ்சு அழிகின்றது
என்னை?? என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
(ப-ரை.) புறத்தொழுக்கம் உளதாகிய துணையேயன்றி நாள்
தோறும் கனவில் வந்து வருத்துதலும் உடையனாதலால் என் நெஞ்சு
பெருமையிழந்து மெலிகின்றதாம். புதன்மிசையே நுடங்கும் வேழ
வெண்பூக் கரிதான விசும்பின்கண்ணே பறக்கும் குருகுபோலத்
தோன்று மூரன் என்றது தன்மை தோன்றாது ஒழுகுவாரையுடை
யான் எ-று.
குறிப்பு. புதல்=புதர்-சிறுதுாறு, நுடங்கும்-அசைகின்ற, குரு
கின்-நாரையைப் போல. விசும்பாடு குருகு: குறுந். 260 : 1, அடி,
1-2; அகநா. 235. புதுவோர்-வம்பப் பரத்தையரை, மேவலன்-
விரும்புதலையுடையான்; ?வதுவை மேவல னாகலின்? (அகநா. 206
::12). வறிதாகின்று-வறுமையை உடையதாயிற்று; அஃதாவது
உணர்ச்சி இழந்து நினைப்பொழிந்து நின்றது என்றபடி.
துணை அளவு,
(மேற்.) மு. தலைவனைப் பிரித்தற்கண் தோழியிடத்துத் தலை
விக்குக்கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு, 6, ந.) ( 7 )