எ-து பரத்தையிற் பிரிந்துவந்து தெளித்துக் கூடிய தலைமகற்குப்
பின் அவ்வொழுக்கம் உளதாயவழி அவன் வரவிடுத்த வாயில்கட்
குத் தலைமகள் சொல்லியது.
(ப-ரை.) செருந்திப் பூவொடு வேழம் கரும்புபோல அலமரும்
ஊரனென்றது தம் சேடியரோடு பொதுமகளிர் குலமகளிரைப்
போலத் தருக்கியொழுகுமூரன் எ-று.
குறிப்பு. சாய்-பஞ்சாய்க் கோரை; மரவிசேடமுமாம்; இது
செருந்திக்கு உவமை . செருந்தி-ஒருவகைக்கோரை; இது நெட்டிக்
கோரை யென்றும் வாட் கோரை யென்றும் தண்டான்கோரை யென்
றும் பழையவுரைகளில் வழங்கப்படுகிறது; மதுரைக். 172; பட். 243;
இதன் பூவைப் பாவை யென்றலும் அதனை மகளிர்க்கு உவமை கூற
லும் மரபு. வேழத்திற்குக் கரும்பு : ஐங். 12 : 1. அலமரும்-சுழன்றா
டும் மலரன்ன கண் என்றது பட்டாங்கு கூறியது. கண் அழப் பிரி
தல்: ஐங். 32, 38, 40, 334.
தெளித்து-தெளியச் செய்து. (பி-ம்) 1‘செந்தியொடு? ( 8 )