எ-து வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்து
நின்று கேட்ப நெருநல் இல்லத்து நிகழ்ந்தது இதுவெனத் தலைமகள்
தோழிக்குச் சொல்லியது.
குறிப்பு. நென்னல்-நேற்று. ஊரார் துறைவற்குப் பெண்டென
நென்னல் என்னை மொழிய அதுகேட்டு அன்னை ‘அன்னாய்? என்ற
னள். ஊரார் துறைவற்குப் பெண்டென மொழிதல் : குறுந். 51 : 6.
அன்னை-செவிலித்தாய். பைபய; ஐங் 83. குறிப்பு. யானே எம்மை
என்றனென்; எம்மை யென்றது தோழியையும் உளப்படுத்தி.
(மேற்.) அடி, 3. ?ஈண்டு ‘பெண்டென கிளவி? என்றே பாடம்
கொளல் வேண்டும் ; ‘ஊரார் பெண்டென மொழிய? எனச் சான்
றோர் கூறலின்? (தொல். பெயர். 9, ந.) பெண்டென்றதனைக்
கேட்டு ‘அன்னா யென்றனள் அன்னை? என அலர்தூற்றினமை
கண்டு செவிலி கூறிய கூற்றினைத் தலைவி கொண்டு கூறியவாறு
(தொல். களவு. 24, ந.)
(பி-ம்.) 1 ‘மொழிப? 2 ‘டன்னை? 3 ‘பைபைய?, ‘பைய வெம்மை? ( 3 )