எ-து இடைவிட்டொழுகும் தலைமகன் வந்து சிறைப்புறத்தானா
னமையறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச்
சொல்லியது.
குறிப்பு. கொண்கன்-கொண்கனை, நேரேம்-காணப்பெறேம்;
எதிர்ப்படேம். இரற்றும்-ஒலிக்கும் : ஐங். 152 : 3 மடலம் பெண்ணை-
மடல்களையுடைய பனை. நாரையும் பனைமடலும் : அகநா. 40 : 14-6.
அவனுடைய நாட்டிற்குச் செல்குவங்கொல்லோ.
(பி-ம்.) 1 ‘கொண்கனை? 2 ‘நேரேனாயினுஞ்? 3 ‘னாரைவிரற்றும்?
4 ‘பெண்ணையவருடை?, ‘பெண்ணையவனுடைய? ( 4 )