116


(12) தோழிக்குரைத்த பத்து


116. அம்ம வாழி தோழி நாமழ
   நீல விருங்கழி நீலங் கூம்பும்
   மாலைவந் தன்று மன்ற
   காலை யன்ன காலைமுந் துறுத்தே.

 எ-து எற்பாட்டின்கண் தலைமகன் சிறைப்புறத்து நின்று
கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

  குறிப்பு. காலையன்ன காலை-யமனைப்போன்ற தென்றற்
காற்றை; கால்-யமன். முந்துறுத்து-முன்னிட்டு, நாமழ, காலை
முந்துறுத்து மாலை வந்தன்று.      ( 6 )