119


(12) தோழிக்குரைத்த பத்து


119. அம்ம வாழி தோழி நன்றும்
   எய்யா மையி 1னேதில பற்றி
   அன்பிலன் மன்ற பெரிதே
   மென்புலக் கொண்கன் வாரா தோனே.

 எ-து ‘வரைதற்கு வேண்டுவன முயல்வேம்’ எனச்சொல்லி
வரையாது செலுத்துகின்ற தலைமகன் சிறைப்புறத் தானானமை
யறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

  குறிப்பு. நன்றும்-நன்மை பயப்பனவற்றையும், எய்யாமை
யின்-அறியாமையால். ஏதில-அயலாக உள்ளவைகளை. மென்
புலம்-நெய்தல் நிலம்; ஐங். 138 : 3; புறநா. 42: 18, வாராதோனாத
லால் ஏதில பற்றிப் பெரிதும் அன்பிலன், மன்ற, செலுத்துகின்ற-
காலத்தைக் கழிக்கின்ற.

  (பி-ம்.) 1 ‘னேதில பெற்றி’, ‘னேதிலர்ப் பற்றி’, ‘னேதில்
பற்றி’.         ( 9 )