120


(12) தோழிக்குரைத்த பத்து


120. அம்ம வாழி தோழி நலமிக
    நல்ல வாயின வளியமென் 1றேளே
    மல்ல 2லிருங்கழி நீரறல் விரியும்
    மெல்லம் புலம்பன் வந்த மாறே.

  எ-து வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்து சிறைப்
புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
   குறிப்பு. நலம்-அழகு, அளிய-அளிக்கத்தக்கன. மல்லல்-
வளம் பெற்ற. அறல்-கருமணல். மெல்லம் புலம்பன்-மெல்லிய
கடற்கரையையுடைய தலைவன்; ஐங்.. 190 : 3, 302 : 4 ; நற், 195 : 4 ;
குறுந். 5 : 4, 245 : 5 ; அகநா. 10 : 4. மாறு : ஏதுப்பொருள் படுவதோ
ரிடைச் சொல்; புறநா. 4 : 17, உரை. புலம்பன் வந்தமாறே மென்
தோள் அளிய. தலைவன் வரத் தோள் நலமெய்தல் : “மணப்பின்
மாணல மெய்தித், தணப்பின் ஞெகிழ்ப தடமென் றேளே” (குறுந்.
299 : 7-8).

  (மேற்.) அடி, 4 ‘தெள்ளமபுனல் : மெல்லம்புலம்பு போல்வதோர்
பண்புத் தொகை’ (திருச்சிற். 379, உரை). மு. பெற்றவழி மலியின்
தலைவிக்குக் கூற்று நிகழும் (தொல். களவு. 21, இளம்.) தலைவி
இடையீடின்றித் தலைவனை எதிர்ப்படப் பெற்ற ஞான்று புதுவது
மலியின் அவளுக்குக் கூற்று நிகழும் (தொல். களவு. 20, .)

 .(பி-ம்.) 1 ‘றோள்கள்’ 2 ‘லிருங்கழி மலரும்’, ‘லிருங்கழி மல்கும், ( 10 )

(12) தோழிக்குரைத்த பத்து முற்றிற்று.