121


(13) கிழவற்குரைத்த பத்து


121. கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
   முண்டகக் கோதை நனையத்
   தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே.

  எ-துபரத்தை தலைமகற்குச் சொல்லியது; பெதும்பை பருவத்
தாள் ஒரு பரத்தையோடு கூடி மறைந்து ஒழுகாநின்றானென்ப
தறிந்து தலைவி புலந்துழி,‘இத் தவறு என்மாட்டில்லை; நீ ‘இப்
புலவியை நீக்க வேண்டும் என்று தோழிக்குத் தலைமகள் கூறப்
புலவியை 1நீக்கக் கருதிய தோழி அவள் இளமை கூறி நகையாடிச்
சொல்லியதூஉமாம்.
  இனி வருகின்றபாட்டு ஒன்பதிற்கும் இத்துறையாம்?.

குறிப்பு. கண்டிகு மல்லமோ-கண்டே மல்லமோ, கொண்க :
விளி, கேள்-உறவாக உள்ளாள்; மனைவி முண்டகக் கோதை-
கடம் முள்ளிப் பூவாற் செய்யப்பட்ட மாலை; நற். 245 : 2-3; புறநா.
24 : 11. பௌவம்-கடல், நின்றோளாகிய நின்கேளைக் கண்டிகு
மல்லமோ.

   அவளிளமை-பெதும்மைப் பருவப் பரத்தையின் இளமை.

  (மேற்.) அடி, 1, ‘இகும் என்னும் இடைச்சொல் தன்மைக்
கண்ணும் வரும்? (தொல். இடை, 27, இளம், ந. சே.) நன். 440,
மயிலை, 441, சங்.

  (பி-ம்.) 1 ‘நீக்கவேணுமென்று? ( 1 )