136


(14) பாணற்குரைத்த பத்து


136. நாணிலை மன்ற பாண நீயே
   கோணேரிலங்குவளை நெகிழ்த்த
   கானலந் துறைவற்குச் சொல்லுகுப் போயே.

  எ-து வாயிலாய்ப் 1புகுந்து தலைமகன் குணங்கூறிய
பாணற்கு வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது.
  குறிப்பு. கோள் நேர் இலங்கு வளைமுன்பு கொள்ளுதலமைந்த
அழகிய வளைகள், நெகிழ்த்த-நெகிழச் செய்த. வளைநெகிழ்த்த
துறைவன் : குறுந் 11 : 1, துறைவற்கு-துறைவன் பொருட்டு,
சொல் உகுப்போயே-பயன்படு சொற்களைப் பாழ்படுத்துகின்
றனையே; கலித். 69 : 19.
சொல்லுகுப்போயே, நாணிலை, மன்ற. (பி-ம்.) 1‘புகுந்த?     ( 6 )