எ-து வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகின்ற தலை
மகள் ‘அவன் வரைதற்குப் பிரியவும் நீ ஆற்றாயாகின்றது என்னை??
என்ற தோழிக்குச் சொல்லியது.
குறிப்பு. எக்கர்-நீர்கொண்டு வந்திட்ட மணலிலுள்ள
எக்கர் ஞாழல் : ஐங். 142-50.செருந்தி-ஒருவகை மரம். துளி-
நீர்த்துளியை. பயலை-பசலையை. துறை பயலை செய்தன.
(மேற்.) மு. இது வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றுவிக்கும்
தோழிக்குத் துறை இன்பமுடைத்தாகலான், வருந்திற்றெனத்
தலைவி கூறியது; சுரத்தருமை முதலியனவன்றி நெய்தற்குள்
பாலை வந்தது (தொல். அகத். 9, ந.) (பி-ம்.) 1 ‘பசலை? ( 1 )