143


(15) ஞாழற்பத்து


143. எக்கர் ஞாழற் புள்ளிமி ழகன்றுறை
   இனிய 1செய்து நின்றுபின்
   முனிவு செய்தவிவ டடமென் றோளே.

 எ-து புறத்துத் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.
  (ப-ரை) ‘இனிய செய்து................ மென்றோள்? என்றது அக்காலத்து
நினக்கு இனிமை செய்து பின்முனிவைச் செய்தனவாதலால், இஃது
இத்தோள்களின் தவறல்லது நின்தவறன்று என்பதாம்; ஞாழற்
கண்ணே புள்ளிமிழகன்றுறையென்றது இவ்வூரகன்றுறையார் அலர்
தூற்றுவர் என்பதாம்.

  குறிப்பு. இமிழ்தல்-ஒலித்தல், துறையின்கண், இனியசெய்து-
இனிமையானவற்றைச் செய்து. இவள் என்றது தலைவியை, தட
மென்தோள்-பரந்த மெல்லியதோள்; குறுந். 77 : 6. தோள் இனிய
செய்து பின் முனிவு செய்த. (பி-ம்) 1 ‘செய்த நின்றுயின்?   ( 3 )