144


(15) ஞாழற்பத்து


144. எக்கர் ஞாழ லிணர்படு பொதும்பர்த்
    தனிக்குரு குறங்குந் துறைவற்
   கினிப்பசந் தன்றென் மாமைக் கவினே.

 எ-து தலைமகன் வரைந்துகோடல் நினையாது களவொழுக்கமே
விரும்பி ஒழுகாநின்றானென்பது அறிந்து வேறுபட்ட தலைமகள்,
‘அவன் கூறியவாற்றால் இனிக் கடிதின் வரைவன் ; ஆற்றாயாகாதது
ஒழிய வேண்டும்? என்ற தோழிக்குச் சொல்லியது.

  (ப-ரை.) ‘எக்கர் ஞாழல்.......... உறங்கும்? என்றது இனிக்காலம்
வந்தவிடத்தும் வரைந்துகொண்டு ஒன்றுபட்டொழுக நினையாது
.
னித்துறைதலே விரும்புவான் எ-று. இப்போது பசந்ததென்றது
அவன் வரைவேனென்று கூறிய வார்த்தையை மெய்யென்று
கொண்டு கூறுதலால், இப்போதுகாண் என்மாமைக்கவின் பசந்தது
என்றவாறு.

  குறிப்பு. இணர்-பூங்கொத்து. பொதும்பர்-சோலை, இனி-இப்
பொழுது. பசந்தன்று-பசந்தது. மாமைக்கவின்-மாமையாகிய
பேரழகு. மாமைக்கவின் பசந்தன்று; ஐங். 35 : 4; குறுந்.
27 : 4-5.      ( 4 )