150


(15) ஞாழற்பத்து


150. எக்கர் ஞாழ னறுமலர்ப் பெருஞ்சினைப்
   புணரி திளைக்குந் துறைவன்
   1புணர்வி னின்னா னரும்புணர் வினனே.

 எ-து முன்னொருகாற் பிரிந்துவந்த தலைமகன் பின்னும் பிரிந்து
வந்துழி அவனை முயங்காளாகத் தோழி, ‘நீ இவ்வாறு செய்
தற்குக் காரணம் என்?’ என்று வினவியவழித் லைமகள் தோழிக்
குத் தலைமகன் கேட்பச் சொல்லியது.
  (ப-ரை.) நறுமலர்ப்பெருஞ்சினை வருந்தவந்து திரை திளைக்கு
மென்றது ஓரிடத்தானாயொழுகாது வந்தும் பெயர்ந்தும் நம்மை
வருத்தமுறுத்துவான் எ-று.
  குறிப்பு. ஞாழல் நறுமலர் : நற். 106 : 6-7. 267 : 4-5. குறுந்.
318 : 2 நறுமலரையுடைய பெருஞ்சினையை, புணரி-அலை, திளைக்கும்-
அசைக்கும். புணர்வின்-புணர்ச்சிக் காலத்தில், இன்னான்-துன்பத்
தைச் செய்வான். அரும் புணர்வினன்-அருமையாக நம்மை வந்
தடைபவன்; பெரும்பாலும் பரத்தையரில்லத்தே வாழ்பவன் என்ற
படி, அரும் புணர்வினன் புணர்வின் இன்னான்.
    (பி-ம்.) 1 ‘புணர்வினன்னா’    ( 10 )

(15) ஞாழற்பத்து முற்றிற்று.