எ-து நொதுமலர் வரைவின்கண் செவிலிகேட்குமாற்றால் தலை
மகள் தோழிக்கு அறத்தொடுநிலை குறித்து உரைத்தது.
குறிப்பு. அன்னாய் வாழி வேண்டன்னை : ஐங். 202-10 : 1;
குறுந். 321 : 8. என்னை-என் தலைவன்; ஐங். 110 : 3. மலைந்தான்-
அணிந்தான். பொன்வீ-பொன்மலர். மணியரும்பு-இரத்தினம்
போன்ற அரும்பு. என்ன மரம் என்றது வியப்பு. அவர் என்றது
தலைவனை. அவரது சாரலின்கண் பொன்வீயும் மணியரும்புமுடை
யன என்ன மரம்கொல்.
(மேற்.) மு. இது தழையும் கண்ணியும் தந்தானென்பதுபடக்
கூறி அறத்தொடு நின்றது (தொல். களவு. 24, இளம்.). தழைந்தா
னெனக் கூறித் தோழி அறத்தொடு நின்றது (தொல். களவு. 23,
பொருள் 13, ந).
(பி-ம்.) 1 ‘தரினு’ ( 1 )