203

3. குறிஞ்சி

(21) அன்னாய்வாழிப் பத்து


203. அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்
   தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட்
   டுவலைக் கூவற் கீழ
   மானுண் டெஞ்சிய கலிழி நீரே.

 எ-து உடன்போய் மீண்ட தலைமகள், ‘நீ சென்றநாட்டு நீர்
இனியவல்ல; நீ எங்ஙனம் 1நுகர்ந்தாய்?’ எனக்கேட்ட தோழிக்குக்
கூறியது.

  குறிப்பு. படப்பைத்தேன்-தோட்டக்கூற்றிலுள்ளதேன். மயங்கு
பாலினும் இனிய-கலந்த பாலைக்காட்டிலும் இனிமைபொருந்தியன.
உவலைக் கூவற்கீழ-தலையையுடைய கிணற்றின் அடியிலுள்ள :
உவலை-தழை. தழை மூடிய எனலுமாம். மான்-மிருகங்கள். கலிழி
நீர்-கலங்கல் நீர். மானுண்டெஞ்சிய நீரையுண்ணுதல் : குறுந். 56 :
1-3. அவர் நாட்டுக் கலிழி நீர் பாலினும் இனிய.
   (மேற்.) மு, உடன்போய் மீண்ட தலைவி நீ சென்ற நாட்டு நீர்
இனியவல்ல எங்ஙனம் நுகர்ந்தாயென்ற தோழிக்குக் கூறியது
( தொல். அகத். 43, ந.) (பி-ம்.) 1 ‘நுகர்ந்தவாறெனக்’   ( 3 )