204

3. குறிஞ்சி

(21) அன்னாய்வாழிப் பத்து


204. அன்னாய் வாழிவேண் டன்னையஃ தெவன்கொல்
    வரையர 1மகளிரி னிரையுடன் குழீஇப்
    பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி
    நல்ல ணல்ல ளென்ப
    தீயேன் றில்ல 2மலைகிழ வோற்கே.

  எ-து வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புத்
தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
  குறிப்பு. வரையர மகளிரின் நிரை-மலையுறை தெய்வமகளிர்
போன்ற ஆயத்தாரதுநிரை. குழீஇ-கூடி என்ப-என்பர். நிரை
நல்லள் என்ப ; மலைகிழவோற்குத் தீயேன்தில்ல ; நல்லாளாயின்
தலைவன் விரைவில் வரைந்துகொள்வானே என்ற பொருள் ஒழிந்து
நின்றது
  (பி-ம்.) 1 ‘மகளிர்நிரை? 2 ‘மலைகிழவோர்க்கே? ( 4 )