எ-து நொதுமலர் வரைவுவேண்டிவிட்டுழித் தலைமகட்கு உள
தாகிய வருத்தம் நோக்கி, ‘இவள் இவ்வாறாதற்குக் காரணம்
என்னை?? என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு
நின்றது.
குறிப்பு. நனிநாணுடையள்-மிக்க நாணத்தையுடையவள.்
நின்னும் அஞ்சும்-உன்னிடமிருந்து அஞ்சுகிறாள். பாயற்றுஞ்சிய-
படுக்கையில் துஞ்ச. தலைவன் மார்பில் துஞ்சுதல் : ஐங். 14 : 3-4
குறிப்பு. வெய்யள்- விருப்பமுடையள். நோகோ-வருந்துவேனாக.
அன்னாய், தோழி, நாணுடையள், அஞ்சும், நாடன் மார்பில்
துஞ்சிய வெய்யள், யான் நோகோ.
(மேற்.) அடி, 5. ‘நோகோயானே? எனச் செய்கு என்னும்
வாய்ப்பாட்டு வினைமுற்று பெயர் கொண்டது (தொல். வினை, 7. ந.).
மு. தோழி தலைவி வேட்கை கூறியது (தொல். களவு. 24, இளம்.)
(பி-ம்.) 1 ‘டன்னை தோழி? 2 ‘ணின்னினுமஞ்சும்? 3 ‘பாயில்
துஞ்சி? ( 5 )