207

3. குறிஞ்சி

(21) அன்னாய்வாழிப் பத்து


207. அன்னாய் வாழிவேண் 1டன்னை நன்றும்
    உணங்கல கொல்லோநின் றினையே யுவக்காண்
   2நிணம்பொதி வழுக்கிற் றோன்றும்
   மழைதலை வைத்தவர் மணிநெடுங் குன்றே.

  எ-து ‘மழையின்மையால் தினை உணங்கும்? 3 விளையமாட்டா;
புனங்காப்பச் சென்று அவரை 4‘எதிர்ப்படலாமென்று எண்ணி
யிருந்த இது கூடாதாயிற்று; என வெறுத்திருந்த தலைமகட்குத்
தோழி சொல்லியது.

  குறிப்பு. உணங்கல கொல்லோ-உலராவோ. உவக்காண் : ஐங்.
206. வழுக்கு-ஊன் விசேடம், நிணம்பொதி வழுக்கு : புறநா. 125
: 2. மணி நெடுங்குன்று : ஐங். 209 : 5 ; 224 : 2; சிறுபாண். 1; குறுந்.
240 : 7. குன்றுவைத்து வழுக்கின் தோன்றும் குன்று கண்டு
ஆறுதல் : குறுந். 249 : 4.

  (பி-ம்.) 1 ‘டன்னை கன்றும்? 2 ‘நணம்பொதி? 3 ‘விளையமாட்டாத?
4 ‘எதிர்ப்பட்டாலாமென்று? ( 7 )