எ-து காப்புமிகுதிக்கண் தலைமகள் மெலிவுகண்டு தெய்வத்
தினாள் ஆயிற்றென்று வெறியெடுப்புழித் தோழி செவிலிக்குத் அறத்
தொடு நின்றது.
(ப-ரை.) ‘புலவுச்சேர்துறுகல்’ என்றது யாவும் தெய்வத்தினான்
ஆயின வென்று மறி முதலாயின கொன்று புலவுநாறும் நம் குன்
றென்பதாம்.
குறிப்பு. படப்பை-தோட்டக்கூற்றிலுள்ள. புலவுச்சேர்துறுகல்-
புலால் நாற்றம் பொருந்திய குண்டுக்கல்; துறுகல் : ஐங். 239 : 2;
புறநா. 300 : 2. வயங்கிழை-ஒளிபொருந்திய ஆபரணங்கள். நிலை
பெற-நெகிழாமல் நிலைபெற்றிருக்க. அவளுற்ற நோய் துறுகல் ஏறி
அவர் குன்றம் நோக்கிநின்று தணிதற்கும் உரித்து. ( 10 )
(21) அன்னாய் வாழிப்பத்து முற்றிற்று