எ-து உடன்போய்த் தலைமகள் மீண்டுவந்துழி அயலோர்
அவள் தாய்க்குச் சொல்லியது.
குறிப்பு. துயரடச் சாஅய்-துயர் வருத்த மெலிந்து. அறம்
புலந்து பழிக்கும் - அறத்தைக் கோபித்துப் பழிக்கின்ற அளை
கணாட்டி - நீரளைந்த கண்களையுடையவளே; என்றது நற்றாயை; விளி.
நற்றாய் அறத்தைப் பழித்தல் ; ஐங் 376. எவ்வம்-துன்பம். ஏமமாக-
பாதுகாப்பாக. விடலை முந்துற நின்மகள் வந்தனளோ.
(மேற்.) மு இது பார்ப்பார் கூறியது (தொல். அகத். 47, இளம்.).
இஃது அயலோர் கூற்று (தொல். அகத். 42, ந.); தமிழ் நெறி
விளக்கம் 23.
(பி-ம்) 1‘கொண்டுந்? 2‘முண்க? 3‘வெஞ்சின வென்வேல்? ( 3 )