261

3. குறிஞ்சி

(27) கேழற் பத்து


261. மென்றினை மேய்ந்த 1தறுகட் பன்றி
   வன்க லடுக்கத்துத் துஞ்சு நாடன்
   எந்தை யறித லஞ்சிக்கொல்
   2அதுவே மன்ற வாரா மையே.

 எ-து அல்லகுறிப்பட்டுத் தலைமகன் நீங்கினமை அறியாதாள்
போன்று தோழி பிற்றைஞான்று அவன் சிறைப்புறத்தானாய் நிற்பத்
தலைமகட்குச் சொல்லியது.
   (ப-ரை.) தினை மேய்ந்த பன்றி கல்லடுக்கத்துத் துஞ்சும் நாட
னென்றது தான்வேண்டின இன்பம் நுகர்ந்து இனிது கண்படு
தலல்லது வரைதற்கு வேண்டுவன முயலாதான் எ-று.

  குறிப்பு. தறுகண் - அஞ்சாமை. பன்றி தினையை மேய்தல்:
ஐங். 262 : 1, 263 : 1-2, 268 : 1-2. அடுக்கத்து - பக்கமலையில்.
வராமை - நேற்று வாராமல் இருந்தமை. நாடன் வாராமை எந்தை
அஞ்சிக் கொல்.

   (மேற்) மு. தலைவன் வருகின்றது இடையீடாக அச்சம்
மிக்குழித் தலைவி கூறியது. (தொல், களவு. 21, இளம், 23. ந.)
  (பி-ம்) 1 ‘சிறுகட்பன்றி? 2 ‘அதுவே தெய்ய? ( 1 )