எ-து வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டமையறிந்த
தலைமகள், ‘நீ தொலைந்த நலம் இன்று எய்திய காரணம் என்னை??
என்ற தோழிக்குச் சொல்லியது.
(ப-ரை.) பொன்போன்ற தினையைக் கேழல் மாந்தும் நாட
னென்றது தன் நாட்டுவாழும் விலங்குகளும் தமக்கு வேண்டுவன
குறைவின்றிப் பெற்று இன்பம் நுகரும் நாடன் எ-று.
குறிப்பு. புனிறுதீர் ஏனல் - முற்றின தினையை. கட்டளையன்ன -
பொன்னுரைக்கும் கல்லைப்போன்ற; நிறத்துக்கு உவமை. மாந்தும் -
அருந்தும். வந்தன்று - வந்தது. நாடனும். வந்தனன்; என் நலனும்
வந்தன்று. தலைவனோடு நலன் வருதல் : ஐங். 238 : 4-5. ( 3 )