எ-து வரையாதுவந்தொழுகும் தலைமகனைப் பகற்குறிக்கண்ணே
எதிர்பட்டுத் தோழி வரைவு கடாயது.
(ப-ரை.) கேழல் பிணவைப் புணருமென்றது அறிவில்லாதன
ஒழுகும் ஒழுக்கமும் நின்மாட்டுக் கண்டிலேம் எ-று.
குறிப்பு. கோட்ட - கொம்பையுடைய. பன்றிக் கோட்டுக்குப்
பிறை; ?பிறையுறழ் மருப்பிற் கடுங்கட் பன்றி? (அகநா. 322 : 10).
களங்கனி - களாப்பழம்; நிறத்துக்கு உவமை. அயம் - நீர்; அகநா.
62 : 1, கண்டிகும்-கண்டோம். பயந்தன-பசலைநிறம் எய்தின.
நயந்தோள்-விரும்பிய தலைமகளது. கண் பயந்தன, கண்டிகும்.
(பி-ம்,) 1 ‘பசந்தன? ( 4 )