எ-து பரத்தையிடத்தனாக ஒழுகின்ற தலைமகன் விடுத்த வாயில்
மாக்கட்குத் தலைமகள் சொல்லியது.
(ப-ரை.) புலியாற் கொல்லப்பட்ட தன் பிணவின் குட்டியைத்
தந்தையாகிய கேழல் புரக்கும் நாடனென்றது பரத்தையர் காரண
மாக யான் இறந்தால் தன் புதல்வனைத் தானே வளர்க்கத் துணிந்து
என்னை நீத்தானென்பதாம்.
குறிப்பு. புலிகொல் பெண்பால்-புலியாற் கொல்லப்பட்ட பெண்
பன்றியானது. பூவரிக்குருளை-பூப்போன்ற வரிகளையுடைய குட்டிகளை.
வளை வெண் மருப்பு-வளைந்த வெண்மையான கொம்பையுடைய
ஆண்பன்றி தன் குட்டிகளைப் பேணல் : ஐங். 268 : 1-3. பொன்
போற் புதல்வன் : புறநா. 9 : 4; கலித். 85 : 346, ந.; குறள். 63. என்
நீத்தோன் மறந்தனன்.
(மேற்). மு. இது வாயில்களுக்குத் தலைவி கூறியது; குறிஞ்சிக்
கண் மருதம் நிகழ்ந்தது. (தொல். அகத். 12, ந.).
(பி-ம்.) 1 ‘புலிகொள்’ 2 ‘நாடன் மன்றதன்’ ( 5 )