எ-து நொதுமலர் வரைவு பிறந்துழித் தலைமகட்கு உளதாகிய
வேறுபாடு தோழி கூறித் தலைமகனை வரைவுகடாயது.
(ப-ரை.) பன்றியொருத்தலொடு புலிபொருமென்றது நினக்கு
நிகரல்லாதார் வந்து தலைப்படவும் அதனை நீக்காது இடங்கொடுத்து
ஒழுகா நின்றாயென்பதாம்.
குறிப்பு. சிறுக்கண்-சிறிய கண்; விரித்தல் விகாரம், பன்றி
ஒருத்தலொடு-ஆண் பன்றியோடு; ஒருத்தல் : ஆண்பாற் பெயர்.
பொரூஉம்-போர் செய்யும். நாணுடைமையம்-நாணத்தை உடைய
ராயிருக்கிறோம். பனி-நீர்த்துளியை. கண் பனிப்பயந்தன. பன்றி
யொடு புலிபொரும் என்றமையால் வரைவொடு வந்த நொதுமலர்
தகுதியில்லார் என்றமை பெறப்பட்டது.
(மேற்) மு. அடி 2, ‘குறுக்கை யிரும்புலி? என்பது வலிக்கும்
வழி வலித்தல் (தொல். எச்ச. 7, சே.)
(பி-ம்.) 1 ‘நனிநா ணுடையை மன்றதன்? ( 6 )