267

3. குறிஞ்சி

(27) கேழற் பத்து


267. சிறுகட் பன்றிப் பெருஞ்சின வொருத்தல்
   துறுக லடுக்கத்து வில்லோர் மாற்றி
   ஐவனங் கவருங் குன்ற நாடன்
   வண்டுபடு கூந்தலைப் பேணிப்
   பண்பில 1சொல்லுந் தேறுதல் செத்தே.

  எ-து தலைமகளைத் தலைமகன் வரைவலெனத் தெளித்தானென்று
அவள் கூறக்கேட்ட தோழி அவன் சிறைப்புறத்தானாகச் சொல்
லியது.

  (ப-ரை) ‘பண்பிலசொல்லும்? என்றது பொய்ம்மொழிகளைச்
சொல்லும் எ-று. பன்றி யொருத்தல் காவலரையோட்டி ஐவனநெற்
கவரு மென்றது களவினிற் காவலரை வென்று பெறும் இன்பமே
விரும்புவான் எ-று. ‘தேறுதல் செத்தே? என்றது தான் சொன்ன
வாாத்தைகளை இவள் மெய்யாகக் கொள்ளுமென்பது கருதி எ-று.

    குறிப்பு. துறுகல் அடுக்கத்து-பெரிய மலையினது பக்கமலையில்.
வில்லோர்-வில்லையுடைய வேடர்களை. மாற்றி-விலக்கியோட்டி.
ஐவனம்-மலைநெல்லை, வண்டுபடு கூந்தல்-தலைவியை ; ஐங். 256 :
2. பண்பு இல-பண்பற்ற பொய்ம்மொழிகளை. செத்து-கருதி. நாடன்
பேணி, தேறுதலைச் செத்துப் பண்பில செல்லும். (பி-ம்.)
1 ‘செல்லுந்? ( 7 )