269

3. குறிஞ்சி

(27) கேழற் பத்து


269. கேழ லுழுதெனக் கிளர்ந்த வெருவை
    விளைந்த செறுவிற் றோன்று நாடன்
    வாரா தவணுறை நீடி னேர்வளை
    இணையீ ரோதி நீயழத்
    துணைநனி 1யிழக்குவென் மடமை யானே.

   எ-து குறைநயப்பக்கூறித் 2தலைமகளைக் கூட்டிய தோழி அவன்
இடையிட்டுவந்து சிறைப்புறத்து நின்றுழித் தலைமகட்குச் சொல்லு
வாளாய்ச் சொல்லியது.

  (ப-ரை.) ‘துணை நனியிழக்குவென் மடமையான்? என்றது
நீ எனக்குத் துணையாதலை இழப்பேன் யான், அவனைத் தேறி முன்
செய்த மடமையான் எ-று. இறந்துபடுவேனென்பதாம். நீ அழ
வாராது அவணுறை நீடினெனக் கூட்டுக. கேழல் உழுததாக
எருவை நெல்விளைந்த செறுப்போலத் தோன்று மென்றது வேட்கை
நலியத் தனக்குவந்த வருத்தத்தானே தலை சாய்த்து நல்லாரைப்
போல ஒழுகிய துணையேயுள்ள தென்பதாம்.

   குறிப்பு. உழுதென-முகத்தால் உழுததாக. எருவை-பைஞ்
சாய்க் கோரை. விளைந்த செறுவின்-நெல் விளைந்த வயலைப்போல,
அவண் உறை நீடின்-தன் ஊரின்கண் தங்குதல் நீடின். இணை
யீரோதி : தலைவியை நோக்கிய விளி; ஓதி-கூந்தல். துணை நனி
இழக்குவென்-நீ எனக்குத் துணையாதலை இழப்பேன். ஓதி. நீ அழ
நாடன் வாராது நீடின் யான் நின் துணையை இழக்குவென்; இறப்
பேன் என்றபடி.

   (மேற்) மு. தலைவன் தலைவியது பண்பு பாராட்டல் (நம்பி.
களவு. 17.)

   (பி-ம்.) 1 ‘யிழக்குவன் மடமையோனே? 2 ‘தலைமகனைக் கூட்டிய? ( 9 )