270

3. குறிஞ்சி

(27) கேழற் பத்து


270. கிழங்ககழ் கேழ லுழுத சிலம்பில்
    1தலைவிளை கானவர் கொய்தனர் பெயரும்
    புல்லென் குன்றத்துப் புலம்புகொ ணெடுவரை
    காணினுங் கலிழுநோய் செத்துத்
    தாம்வந் தனர்நங் காத லோரே.

  எ-து வரைவுகாரணமாக 2நெட்டிடை கழிந்து பொருள்வயிற்
போகிய தலைமகன் வந்தமையறிந்த தோழி உவந்த உள்ளத்
தளாய்த் தலைமகட்குச் சொல்லியது.

  (ப-ரை.) கிழங்ககழ்கேழல் உழுத புழுதிக்கண்ணே வித்த
விளைந்த பயிரைக் கானவர் கொய்யும் சிறப்புடையதேனும் அவன்
அவ்விடத்து உறையாமையின் தனக்குப்புல்லென்று தோன்று
தலால், ‘புல்லென் குன்றம்? எனவும், ‘புலம்புகொள் நெடுவரை?
எனவும் இழித்துக் கூறப்பட்டதெனக் கொள்க.

   குறிப்பு. கிழங்கு அகழ்-கிழங்கை அகழ்ந்த. சிலம்பில்-மலை
யில், கேழலுழுத சிலம்பு; புறநா. 168 : 3-4; ஐந். எழு. 11. தலை
விளை-முதல் விளைச்சலை. கானவர்-குறவர். புல்லென் குன்றத்து-
பொலிவழிந்த மலையில். புலம்பு-தனிமை. வரை-பக்கமலையை.
கலிழு நோய் செத்து-நாம் கலங்கும் துன்பத்தைக் கருதி. காதலர்
வந்தனர்.

    (பி-ம்.) 1 ‘தலைவிதை? 2 ‘நெட்டிடைக் கழித்து? ( 10 )

(27) கேழற்பத்து முற்றிற்று