272

3. குறிஞ்சி

(28) குரக்குப் பத்து


272. கருவிரன் மந்திக் கல்லா வன்பறழ்
   அருவரைத் தீந்தே னெடுப்பி1யயல
   துருகெழு நெடுஞ்சினைப் பாயு நாடன்
   இரவின் வரத லறியான்
   வரும்வரு மென்ப டோழி யாயே.

   எ-து அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக
முன்னை நாள் நிகழ்ந்ததனைத் தோழிக்குச் சொல்லுவாள் போன்று
தலைமகள் சொல்லியது.

  (ப-ரை) மந்திக்கு ஒரு மகவாகிய பார்ப்பு மலைக்கண் பெருந்
தேனிறாலைக் கிளர்த்து எழுப்பிக் ஈக்கு வெருவி அதன் அயற்
சிகரத்திலே பாயுமென்றது, தான் நுகரக் கருதிவந்து நம்மை
யுணர்த்திச் சுற்றத்தார் பலரும் உணர்ந்த அதற்கு வெருவிப்
பெயர்வான் எ-று.

   குறிப்பு. கருவிரல் மந்தி; மலைபடு. 311 : குறுந். 373 : 5;
திணைமா. 10. பறழ்-குட்டி, கல்லா வன்பறழ் : ஐங். 280 : 1; குறுந்.
69 : 3. தீந்தேன் எடுப்பி-இனிய தேனிறாலைக் கிளர்த்து எழுப்பி.
அயலது-பக்கத்திலுள்ளது. உரு-அச்சம். நெடுஞ்சினை-பெரிய
சிகரத்திலே. வருதல் அறியான்-வாரானென்றபடி, தோழி : விளி
யாய் வரும் வரும் என்பள்.

   (பி-ம்.) 1 ‘யல்ல? ( 2 )