291

3. குறிஞ்சி

(30) மஞ்ஞைப் பத்து.


291. மயில்க ளாலக் குடிஞை யிரட்டும்
   துறுகல் லடுக்கத் ததுவே பணைத்தோள்
   ஆய்தழை நுடங்கு மல்குற்
   காதலி யுறையு நனிநல் லூரே.

   எ-து வரைவிடைவைத்துப் பிரிந்து மீள்கின்ற தலைமகன்
சொல்லியது.

  குறிப்பு. குடிஞை இரட்டும்-பேராந்தை மாறி ஒலிக்கும்;
மலைபடு. 141. அடுக்கத்தது-பக்கமலையின்கண் உள்ளது. பணைத்
தோள்-பெருத்ததோள். காதலி-தலைவி. நல்லூர் துறுகல்
அடுக்கத்தது. ( 1 )