292

3. குறிஞ்சி

(30) மஞ்ஞைப் பத்து.


292. மயில்க ளாலப் பெருந்தே னிமிரத்
    தண்மழை தழீஇய மாமலை நாட
    நின்னினுஞ் சிறந்தன ளெமக்கே நீநயந்து
    நன்மனை யருங்கடி யயர
    எந்நலஞ் சிறப்ப1யா மினிப்பெற் றோளே.

    எ-து பின் முறையாக்கிய பெரும்பொருள் வதுவை முடித்தவளை
இல்லத்துக் கொண்டு புகுந்துழித் தலைமகள் உவந்து சொல்லியது.

   (ப-ரை.) மழைப்பருவம் வேண்டியிருக்கின்ற மயில்கள் ஆலத்
தேன்கள் இமிர மழைபெய்யும் நாடவென்றது யாங்கள் கருதியிருக்
கின்ற பெரும் பொருளை உவப்ப முடித்தனை எ-று.

   குறிப்பு. பெருந்தேன்-பெரியவண்டுகள். இமிர-ஒலிக்க.
தழீஇய-தழுவிய. கடிஅயர-மணத்தைச்செய்ய பெற்றோள் நின்னி
னும் சிறந்தனள்.

   பின்முறையாக்கிய பெரும்பொருள்வதுவை-மூவகை வருணத்
தாரும் முன்னர்த்தத்தம் வருணத்து எய்திய வதுவைமனைவியர்க்
குப்பின்னர் முறையாற்செய்து கொள்ளப்பட்ட பெரிய பொருளாகிய
வதுவை மனைவியர் (தொல். கற்பு. 31, ந.).

   (பி-ம்.) 1 ‘யாயினிப் பெற்றோளே? ( 2 )