293

3. குறிஞ்சி

(30) மஞ்ஞைப் பத்து.


293. சிலம்புகமழ் காந்த ணறுங்குலை யன்ன
    நலம்பெறு கையி1னென் கண்புதைத் தோயே
    பாய லின்றுணை யாகிய பணைத்தோள்
    தோகை மாட்சிய மடந்தை
    நீயல 2துளரோவென் 3னெஞ்சமர்ந் தோரே.

    எ-து பகற்குறியிடம்புக்க தலைமகன் தலைவி பின்னாக மறைய
வந்து 4கண்புதைத்துழிச் சொல்லியது.

   (ப-ரை.) ‘நீ யல்லது உளரோவென்னெஞ்சமர்ந்தோரே’ என்
றது நீயல்லது பிறருளராயினன்றே நான் கூறுவது அறிதல்
வேண்டிக் கண் புதைக்கற்பாலது; அஃதில்லாதவழிப்புதைப்பது
என்னனென்று அவள் பேதைமை உணர்த்தியதாம்.

  குறிப்பு. சிலம்பு-மலையில், காந்தளது குலையன்ன. கையின்-
கையினால். கண் புதைத்தோயே-கண்ணைப்பொத்தியவளே; விளி.
பாயல்-படுக்கை. தோகைமாட்சிய-மயில்போன்ற பெருமையை
யுடைய என் நெஞ்சமர்ந்தோர் நீயலது உளரோ; இல்லை என்ற
படி. தலைவி தலைவன் கண்ணைப் புதைத்தல் : கம்ப. பூங்கொய். 18.

  (மே.ற்.) மு. தலைவி கண்புதைத்தவழித் தலைவன் கூறியது
(தொல். களவு, 17, இளம்.) யாம் மறைந்துசென்று இவனைக்
கண்ணைப்புதைத்தால் தலைநின்றொழுகும் பரத்தையர் பெயர் கூறுவ
னென்று உட்கொண்டு தலைவிசென்று கண்புதைத்துழித் தலைவ
னுக்குக் கூற்று நிகழும் (தொல். கற்பு. 5, ந.)

  (பி-ம்.) 1 ‘னெங்கண்புதைத்’ 2 ‘துளளோ’ 3 ‘னெஞ்சயர்ந்
தோரே’ ‘நெஞ்சமர்ந்தோளே’ 4 ‘அவனது கண்புதைத்துழி’   ( 3 )