294

3. குறிஞ்சி

(30) மஞ்ஞைப் பத்து.


294. எரிமருள் வேங்கை யிருந்த தோகை
    இழையணி மடந்தையிற் றோன்றுட நாட
    இனிதுசெய் தனையா னுந்தை வாழியர்
    நன்மனை வதுவை யயரவிவள்
    பின்னிருங் கூந்தன் மலரணிந் தோயே.

    எ-து வதுவை சொல்லாநின்றுழித் தலைமகற்குத் தோழி கூறியது.

  (ப-ரை.) வதுவையில் தலைவிக்கு மலரணியக்கண்ட தோழி
‘இவ்வாறாம்படி அன்றே சூட்டினை? எனச் சொல்லியவாறாம்.
மலர்ந்த வேங்கைக்கண் இருந்த தோகை பொன்னணிமடந்தை
யின் தோன்று நாடவென்றது நீ வரையாதொழுகுகின்ற ஞான்று
நின்றமர் பொன்னணிந்த இன்றுபோலச் சிறப்பவொழுகினாயென்ப
தாம்.

   குறிப்பு. எரிமருள் வேங்கை-நெருப்பையொத்த வேங்கைமரத்
தின் கண்; மருள் : உவமஉருபு; ஐங் 318 : 2, 367 : 1. தோகை-
மயில். மலர்ந்த வேங்கைக்கு இழையும் அதன்கண் உள்ளதோகைக்கு
மடந்தையும் உவமைகள் : ?மலர்ந்த வேங்கையின் வயங்கிழை.
யணிந்து? (பதிற். 40 : 22); புறநா. 224 : 16-7. ஆல் : அசைநிலை.
நுந்தைவாழியர் என்றது பயந்தோர்ப் பழிச்சல் போன்றது. பின்னி
ருங்கூந்தல்-பின்னப்பட்ட பெரிய கூந்தல். நாட, மலரணிந்தோய்
இனிது செய்தனை, நுந்தைவாழியர், வரைவை நல்லது என்றல்;
குறுந். 34.

  (மேற்) மு. தோழி. களவுக்காலத்துற்ற வருத்தத்தின் நீங்கி
னமை கூறியது (தொல். கற்பு. 9. இளம்.; ந) தலைவனைப் பாங்கி
வாழ்த்தல் (நம்பி. வரைவு 4)