எ-து தலைமகன் வரைவிடைவைத்துப் பிரிந்து நீட்டித்துழி
உடன் சென்ற நெஞ்சினைத் தலைமகள் நினைந்து கூறியது.
(ப-ரை.) புனவர்கொள்ளிக்கு அஞ்சித் தன்புகலிலே செல்லும்
மயில்புனம் கொய்தபின்பு அரிதாளிலேயிருந்த குருவி எழுவது
விழுவதாய் வருந்துறச் சிறகை விரித்து ஆடிச்செல்லும் நாடனென்
றது பின்பு வரைந்து கொள்ளக்கருதாதே அலரஞ்சித் தன் மனை
வயிற் சென்றவன் இக்காலத்து யானும் என்னாயத்தாரும் வருந்
துறப் பிரிந்தானென்பதாம்.
குறிப்பு. அவண் உறை மேவலின்-தலைவன் தங்குமிடத்தில்
பொருந்துதலின். மேவலின் வாராது அமைவது கொல்லோ.
புனவர்-தினைப்புனத்துத் தலைவர்; நற். 119 : 1. புகல்-இருப்பிடம்.
மஞ்ஞை-மயில். இருவி இருந்த-புனங் கொய்தபின்பு அரிதாளிலே
இருந்த. வந்துற-துன்பத்தையடைய, மகளிரின்-மகளிரைப்போல.
படர்தரும்-ஆடிச்செல்கின்ற
?சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெருந்துணையும்
நின்றதுகொ னேர்மருங்கிற் கையூன்றி-முன்றில்
முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்
குழந்துபின் சென்றவென் னெஞ்சு? (பழைய வெண்பா)
(மேற்) மு. தலைவன் பிரிந்துழித் தலைவி கலங்கல் (தொல்.
களவு. 21, இளம்,; 20, ந.); களவியற்காரிகை, பக். 77.
(பி-ம்.) 1 ‘கலவமஞ்ஞை? 2 ‘வருத்துறப்?, ‘வெருவுறப்?
3 ‘குன்ற நாடனொடு? ( 5 )