எ-து இரவுக்குறி வருகின்ற தலைமகற்குத் தோழி 1ஆற்றாமை
கூறி மறுத்தது.
(ப-ரை.) ‘அறியேன் யான்? என்றது இதனால் விளைவன யான
றியேனென்பதாம். குறத்தி காக்கும் தினையை மஞ்ஞை கவருநாட
வென்றது நின்னாட்டுக்குத் தக்க களவினுகர்ச்சியே விரும்புகின்றா
யென்பதாம்.
குறிப்பு. கொடிச்சி-குறிஞ்சிநிலத்தலைவி. பெருங்குரல் ஏனல்-
பெரிய கதிரையுடைய தினையை. நடுநாட்கங்குலும்-நடுநிசியிலும்.
கடுமா-யானை. அறியேன்-அதனால் விளைவன அறியேன்.
(பி-ம்.) 1 ‘ஆற்றாமைகூறி? ( 6 )