297

3. குறிஞ்சி

(30) மஞ்ஞைப் பத்து.


297. விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை
    பூக்கொய் மகளிரிற் றோன்று நாட
    பிரியினும் பிரிவ தன்றே
    நின்னொடு மேய மடந்தை நட்பே.

   எ-து ஒருவழித் தணந்து வரையவேண்டுமென்ற தலைமகற்குத்
தோழி கூறியது.

  (ப-ரை) மலர்ந்த வேங்கைச்சினைக்கண் இருந்ததோகை மலர்
கொய்யும் மகளிரைப்போலத் தோன்றுநாடவென்றது நீ மனத்தால்
எங்கட்கு நல்லது புரியாயெனினும் நன்மைசெய்கின்றாய்போலத்
தோன்றுகின்றாயென்பதாம்.

  குறிப்பு. சினை-கினை. வேங்கைமரத்திலுள்ள மயிலுக்குப் பூக்
கொய்யும் மகளிர் : ?வேங்கை............ சினையிருந்த தோகை, பூக்கொய்
மகளிரிற்றோன்று நாடன்? (குறுந். 26 : 1-3). வேங்கைப்பூவை
மகளிர் கொய்தல் : ஐங். 311; மதுரைக். 296-7; குறுந். 208 : 2-4;
அகநா. 48 : 6. மேய-பொருந்திய. மடந்தை நட்பு-தலைவியினது
கேண்மை. நட்பு பிரிவதன்றே.

  (பி-ம்.) 1 ‘பிரியாயன்றே? ( 7 )