299

3. குறிஞ்சி

(30) மஞ்ஞைப் பத்து.


299. குன்ற நாடன் குன்றத்துக் கவாஅற்
    பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
    அஞ்சி லோதி 1யசைநடைக் கொடிச்சி
    கண்போன் மலர்தலு மரிதிவள்
    தன்போற் சாயன் மஞ்ஞைக்கு மரிதே.

   எ-து இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்கிய நிலைமைக்கண்
தலைமகள் ஆயவெள்ளத்தோடுகூடி நிற்கக்கண்ட தலைமகன்
மகிழ்ந்த உள்ளத்தனாய்த் தன்னுள்ளே சொல்லியது.

  (ப-ரை.) குன்றநாடனென்றது அந்நிலத்துக்குரியனாகிய
முருகனை.

  குறிப்பு. குன்றநாடன்-முருகனது; தலைவியது தந்தையுமாம்.
கவான்-பக்கமலையில். பகுவாய்-மலர்ந்த வாயையுடைய. அஞ்சில்
ஓதி-அழகிய சிலவாகிய கூந்தல். அடி, 3 : குறுந். 214 : 3, குவளை
யும் கொடிச்சி காண்போல் மலர்தல் அரிது; மஞ்ஞைக்கும் இவள்
தன் போல் சாயல் அரிது.

  (மேற்) மு. தோழியும் தலைவியும் உள்வழி வந்த தலைவன்
தலைவி தன்மை கூறவே இவள் கண்ணது இவன் வேட்கை
யென்று தோழி குறிப்பான் உணரக் கூறியது (தொல். களவு. 11,
ந,). தலைவியது பண்பு பாராட்டல் (இ. வி. 501). (பி-ம்)
1 ‘யசையியற்? ( 9 )