எ-து தலைமகன் தானே வரைவுவேண்டிவிடச் சுற்றத்தார்
கொடை நேர்ந்தமை தலைமகட்குத் தோழி சொல்லியது.
(ப-ரை.) கொடிச்சி கூந்தல் போல வேண்டி மஞ்ஞை சிறகை
விரிக்கும் வெற்பனென்றது நின்மகிழ்ச்சிக்குத் தக நின்தமர்
மகிழ்ச்சி கூர்ந்தாரென்பதாம்.
குறிப்பு. சிறை-தோகையை. அடி, 1-2: எதிர்நிலையணி,
கொடை எதிர்ந்தனர். அம் தீம் கிளவி-அழகிய இனிய மொழி
விளி. நின் சிறப்புப் பொலிக.
( 10 ) (30) மஞ்ஞைப் பத்து முற்றிற்று
குறிஞ்சி முற்றிற்று
கபிலர்