342

4 பாலை

(35) இளவேனிற் பத்து


342. அவரோ வாரார் தான்வந் தன்றே
    சுரும்புகளித் தாலு மிருஞ்சினைக்
    கருங்கா னுணவங் கமழும் பொழுதே.

    குறிப்பு. ஆலும்-ஒலிக்கும். இருஞ்சினை-பெரிய கிளை. நுணவம்-
நுணா; இது வேனிற்கு உரிய மலர். ( 2 )