4 பாலை
(35) இளவேனிற் பத்து
348. அவரோ வாரார் தான்வந் தன்றே வலஞ்சுரி மரா அம் வேய்ந்துநம் மணங்கமழ் தண் பொழின் மலரும் பொழுதே.
குறிப்பு. வலஞ்சுரி மரா அம் - வலமாகச் சுரித்த வெண்கடப்ப மலரை; மராம் இளவேனிலில் மலர்வது; குறுந் 22 : 3-4, 211 : 4-5; தே. திருஞா. நாகைக்காரோணம். ( 8 )