349

4 பாலை

(35) இளவேனிற் பத்து


349. அவரோ வாரார் தான்வந் தன்றே
    பொரிகான் மாஞ்சினை புதைய
    எரிகா லிளந்தளிரீனும் பொழுதே.

   குறிப்பு. பொரிகால் மாஞ்சினை - பொரிந்த அடியையுடைய
மாமரத்தினது கிளை. புதைய-மறைய எரிகால் இளந்தளிர்.
நெருப்பைப் போன்ற ஒளியைக் கக்குகின்ற இளைய தளிர்-
மாந்தளிர்க்கு எரி; தக்க; 625; ?சீதப் புனலுண் டெரியைக்
காலும், சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே? (சுந்தர. தே);
வி. பா. சம்பவ.