4 பாலை
(35) இளவேனிற் பத்து
350. அவரோ வாரார் தான்வந் தன்றே வேம்பி னொண்பூ வுறைப்பத் தேம்படு கிளவியவர் தெளிக்கும் பொழுதே.
குறிப்பு. உறைப்ப - உதிர தேம்படுகிளவியால். அவர் - தலைவர். தெளிக்கும்- தெளிவு பெறச் செய்யும். வேம்பு வேனிலில் மலர்வது; குறுந். 24 : 1-2, 341 : 1-50. பொழுது வந்தது. தலைவர் வந்திலர்; குறுந். 155 : 3-7; 254 : 1-3.
( 10 ) (35) இளவேனிற் பத்து முற்றிற்று.