391

4 பாலை

(40) மறுதரவுப் பத்து


391. மறுவி றூவிச் சிறுகருங் காக்கை
   அன்புடை மரபினின் கிளையோ டாரப்
   பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
   பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ
   வெஞ்சின விறல்வேற் காளையொ
   டஞ்சி லோதியை வரக்1க ரைந் தீமே

     எ-து உடன்போகிய தலைமகள் மீடற்பொருட்டுத் தாய்
காகத்திற்குப் பராய்க்கடன் உரைத்தது.

    குறிப்பு. மறுவில்-குற்றமில்லாத. தூவி-இறகு. காக்கை : விளி
பச்சூன் - செவ்வித்தசை; புறநா. 258 : 4. பைந்நிணவல்சி-செவ்விய
நிணமான உணவை. பொலம்புனைக்கலத்தில் - பொற்பாத்திரத்தில்.
அஞ்சிலோதி ; ஐங். 49 : 1, குறிப்பு கரைந்தீமே - கரையுங்கள்.
காக்கை கரைதல் புதியோர் வரவைக் குறிக்கும்: குறுந். 210; திருச்
சிற் 235; பழ. 35. 391-100 : மறதரவுப் பத்து - மீளுதலைக் கூறும்
பத்து.

    பராய்க்கடன் உரைத்தல் - பரவித் தான் செய்யும் முறைமை
யைச் சொல்லுதல்.

   (மேற்.) அடி,. 1 சிறுகருங்காக்கையென்பது ஈரடை முதலோ

டாதல் (நன். 402, மயிலை. 403. சங் மு. நற்றாய் உடன்போய
தலைமகள் பொருட்டாகக் காகத்திற்குப் பராய்க்கடன் உரைத்தது
(தொல். அகத். 39, இளம்.). இது நிமித்தத்தொடுபடுத்துப் புலம்
பியது (தொல். அகத், 36. ந.); தமிழ் நெறி விளக்கம், 23; நிமித்தம்
போற்றல் (நம்பி. வரைவு. 16)

   (பி-ம்) 1‘கரைந்திடுமே’ ( 1 )