395

4 பாலை

(40) மறுதரவுப் பத்து


395. முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூரெரிச்
    சுடர்விடு நெடுங்கொடி விடர்முகை முழங்கும்
    இன்னா வருஞ்சுரந் தீர்ந்தன மென்மெல
    ஏகுமதி வாழியோ குறுமகள் போதுகலந்து
    கறங்கிசை யருவி வீழும்
    பிறங்கிருஞ் சோலைநம் மலைகெழு நாட்டே.

    எ-து உடன்போய் மீள்கின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்
லியது.

     குறிப்பு. முளிவயிர்ப் பிறந்த-காய்ந்த மூங்கிலில் தோன்றிய.
வளி-காற்றால். எரிச்சுடரை விடுகின்ற நெடுங்கொடி. விடர்முகை-
வெடிப்பையுடைய குகைகளில்; நற். 156 : 9; குறுந். 218 : 1;
அகநா. 47 : 6; புறநா. 374 : 12. இன்னா - இனியவல்லாத - தீர்ந்
தனம்-கடந்தோம். ஏகுமதி-செல்வாயாக. குறுமகள்; விளி.போது-
மலர். கறங்கிசையருவி - ஒலிக்கின்ற இசையையுடைய அருவி.
பிறங்கிருஞ்சோலை - செறிந்த பெரிய சோலை. நாட்டு ஏகுமதி.

     (மேற்.) மு. தலைவன் தம்முர் சார்ந்தமை சாற்றல் (நம்பி.
வரைவு. 21.) ( 5 )