397

4 பாலை

(40) மறுதரவுப் பத்து


397. கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை
   குருளைப் 1பன்றி கொள்ளாது கழியும்
   சுரநனி வாரா நின்றன ளென்பது
   2முன்னுற விரைந்தநீ ருரைமின்
   இன்னகை முறுவலென் னாயத் தோர்க்கே.

   எ-து உடன்போய் மீள்கின்ற தலைமகள் தன்னூர்க்குச்
செல்கின்றாரைக் கண்டு கூறியது.

   குறிப்பு. கவிழ்மயிர் எருத்து-கவிழ்ந்த மயிர் பொருந்திய
கழுத்தையுடைய. குருளைப் பன்றி-பன்றிக்குட்டியை. கொள்ளாது-
உணவுக்காகப் பற்றாமல். ‘செந்நாயேற்றை....... கழியும்? என்றதால்
சுரத்தினது வெம்மையின் மிகுதி கூறியவாறாயிற்று. இன்னகை
ஆயத்தார்; குறுந். 351 : 7. நீர் என் ஆயத்தோர்க்கு வாரா
நின்றனள் என்பது உரைமின்.

    (மேற்.) மு. மீண்டு வருவாள் ஆயத்தார்க்குக் கூறிவிட்டது.
(தொல். அகத். 45, இளம். 42, ந.); இறை 23; நம்பி. வரைவு. 21.

   (பி-ம்) 1‘பன்றிக்? 2‘முன்னுறச் செல்வீ? ( 7 )