399

4 பாலை

(40) மறுதரவுப் பத்து


399. நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும்
    எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
    சொல்லி னெவனோ மற்றே வென்வேல்
    மையற விளங்கிய கழலடிப்
    பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே.

      எ-து உடன் கொண்டுபோன தலைமகன் மீண்டு தலைவியைத்
தன் இல்லத்துக்குக் கொண்டு புக்குழி அவன்தாய் அவட்குச்
சிலம்புகழி நோன்பு செய்கின்றாளெனக்கேட்ட நற்றாய் ஆண்டு
நின்றும் வந்தார்க்குச் சொல்லியது.

     குறிப்பு. சிலம்பு கழீஇ-சிலம்பைக் கழித்து ; மணம்புரிவதற்கு
முன் மணமகளது காலில் பெற்றோர்கள் அணிந்திருந்த சிலம்பை
நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது சிலம்புகழி நோன்பு
எனப்படும் ; நற். 279 : 10-11. அயரினும் - சடங்கு செய்த
போதிலும். எம்மனையின் கண்ணே வதுவை மணம் கழிக.
சொல்லின் எவனோ - சொன்னால் வரும் குற்றம் என்ன? குறுந்.
141 : 3. வென் - வெற்றி. மையற - குற்றமில்லாதபடி. பொய்வல்
காளை - பொய் கூறுதலில் வல்ல தலைவன்; குறுந் 25;2 தாய்க்கு
?எம்மனை வதுவை மணம் கழிக? எனச் சொல்லின் எவனோ?
சொல்லி என் மனையில் வதுவை மணம் செய்வித்தீர்களில்லையே என
வருந்தியப்படி.

   (மேற்.) மு. தலைவன் மீண்டு தலைவியைத் தன் மனைக்கண்
கொண்டு வந்துழி அவன் தாய் சிலம்புகழிநோன்பு செய்கின்றா
ளெனக் கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க்குக் கூறியது
(தொல். அகத். 36. ந.). தலைமகன் தன்னகத்தே வதுவைக்
கலியாணம் எடுத்துக் கொண்டான் என்பது கேட்ட நற்றாய்
?ஒழிந்த கலியாணம் செய்யினும், நம்மகத்தே வதுவைக் கலியாணம்
செய்ய நேருங்கொல்லோ காளையைப் பயந்தாள்? என்னும் (இறை.
23 உரை.). நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல்
(நம்பி. வரைவு. 24). ( 9 )