எ-து கடிமனைச்சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்
தளாய் நற்றாய்க்குச் சொல்லியது.
இனி வருகின்ற பாட்டு ஒன்பதனுள் முதல் எட்டினுக்கும்
இஃது ஒக்கும்.
குறிப்பு. மறி-மான்குட்டியை. மானும் பிணையும் போல.
நடுவணன்-நடுவின்கண் உள்ளான். கிடக்கை-கிடத்தல். நீனிற
வியலகம்-கடல். கவைஇய-சூழ்ந்த; ?கிண்கிணி கவைஇய?
(முருகு. 13). ஈனும்-இவ்வுலகத்தும்; சிலப். பதி. 53, 23 : 176;
மணி. 28 : 132; பெருங் 3 . 24 : 207. பெறலருங்குரைத்து-பெறு
தற்கரிது; புறநா. 5 : 8.
(மேற்.) மு. இது செவிலி நற்றாய்க்கு உவந்து கூறியது. (தொல்.
கற்பு. 12, ந.). ( 1 )