எ-து சென்றவினை முடியாமையிற் கார்காலம் வந்துவிடத்து
மீளப்பெறாத தலைமகன் தலைமகளுழைநின்றும் வந்த தூதர்
வார்த்தை கேட்டு இரங்கியது.
(ப-ரை.) கார்நாள் உருமொடு நோய் நன்குசெய்தன,
செய்யோள் கிளவியெனக் கூட்டுக.
குறிப்பு. ஐயவாயின-அழகையுடையனவாயின. செய்யோள்
தலைவியினுடைய. கிளவி-வார்த்தைகள். கார்நாள் உருமொடு-
மழைக்காலத்து இடியொடு. கையற-செயலற. பிரிந்தென-பிரிய.
பிரிந்தென உருமொடு செய்யோள் கிளவியும் நோய்செய்தன.
யாமுற்ற துயரத்தை.
(மேற்.) மு. தலைவன் கூற்று நிகழுமிடங்களுள் இது வினை
முடியாமையாற் பருவங்கண்டு மீளப்பெறாத தலைவன் தூதர்
வார்த்தை கேட்டு வருந்திக்கூறியது. (தொல். அகத். 41. ந.) ( 1 )