குறிப்பு. நனி சேய்த்து என்னாது-மிக்க தூரத்திலுள்ளது என்று
எண்ணாமல். காண்குவெம்-காண்பேம். தில்ல : விழைவின்கண்
வந்தது. நுதலுக்கு இளம்பிறை உவமை. நுதலைப் பிறைபோலக்
காண்குவம். வௌவிய-கைப்பற்றிய. மண்ணுதல்-கழுவுதல்.
அரண்பல வௌவிய முரசு; வௌவிய வேந்து எனினுமாம்.
வேந்தினது தொழில் விடின் காண்குவெம்.
(மேற்.) மு. இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் குறித்த
பருவத்து வினைமுடியாமையிற் புலம்பியது. (தொல். அகத். 41, ந,). ( 3 )